1110 மாணவ- மாணவியர் பயிலும் சிறந்த மேல்நிலைப் பள்ளியாக நம் பள்ளி திகழ்கிறது. அடல் டிங்கரிங் ஆய்வகம், ஏழு மெய்நிகர் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மின்னணு வருகைப் பதிவு (Biometric), சி.சி.டி.வி. கேமாராக்கள் மூலம் பள்ளி வளாகக் கண்காணிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், சிறந்த விளையாட்டு மைதானம், தமிழக அரசின் மாணவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் என தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவில் நமது பள்ளி சிறந்து விளங்குகிறது.