GHSS OKM

பள்ளியை பற்றி

பிரிமியர் மில்ஸ் நிர்வாகம், தனது மில் தொழிலாளர்களின் குழந்தைகள் மற்றும் ஒத்தக்கால்மண்டபம் பகுதியை சார்ந்த குழந்தைகள் கல்வி பயில 5.56 ஏக்கர் நிலம் மற்றும் பள்ளிக் கட்டிடத்தை கொடையாக அளித்ததன் மூலம் 1968 ஆம் ஆண்டு இப்பள்ளி தற்போதைய இடத்தில் உயர்நிலைப்பள்ளியாக தொடங்கப்பட்டது. மில் தொழிலாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை மூன்று முறை கொடையாக அளித்து பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை கிடைக்கச் செய்தனர்.

பிரிமியர் மில்ஸ் , மில் தொழிலாளர்கள் தங்களுடைய ஒரு நாள் ஊதியத்தை மூன்று முறை கொடையாக அளித்து பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகளை கிடைக்கச் செய்தனர். தற்போது 961 மாணவ- மாணவியர் சிறந்த மேல்நிலைப் பள்ளியாக ஒத்தக்கால்மண்டபம், அரசு மேல்நிலைப் பள்ளி திகழ்கிறது. 50 ஆண்டுகளை சீரிய முறையில் கடயது பொன்விழா காணும் இப்பள்ளியின் வளர்ச்சிப் பணிகளுக்கு தனியார் நிறுவனங்கள், மக்கள் பிரதிநிதிகள், பொதுமக்கள், முன்னாள் மாணவர்கள் மற்றும் தன்னார்வலர்கள் சார்பான பங்களிப்பு தொடர்ந்து கிடைத்து வருகிறது.

Previous
Next

884 மாணவ- மாணவியர் பயிலும் சிறந்த மேல்நிலைப் பள்ளியாக ஒத்தக்கால்மண்டபம், அரசு மேல்நிலைப் பள்ளி திகழ்கிறது.

இத்தகைய பங்களிப்புகள், நமது பள்ளியை கோயம்புத்தூர் மாவட்டத்திலேயே சிறந்த முன்மாதிரிப்பள்ளியாக மாற்றியுள்ளன. அடல் டிங்கரிங் ஆய்வகம், ஏழு மெய்நிகர் வகுப்பறைகள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுக்கான மின்னணு வருகைப் பதிவு (Biometric), சி.சி.டி.வி. கேமாராக்கள் மூலம் பள்ளி வளாகக் கண்காணிப்பு, சுத்திகரிக்கப்பட்ட குடிநீர், மேம்படுத்தப்பட்ட கழிப்பறைகள், சிறந்த வசதிகளை கொண்டிருக்கும் விளையாட்டு மைதானம், பள்ளியின் சிறந்த கட்டமைப்பு வசதி, தமிழக அரசின் மாணவர்களுக்கான அனைத்து நலத்திட்டங்கள் என அனைத்து வசதிகளுடன் தனியார் பள்ளிகளுக்கு சவால் விடும் அளவில் நமது பள்ளி சிறந்த விளங்குகிறது.

நமது பள்ளியில் பயிலும் மாணவ-மாணவியர் கல்வி, விளையாட்டு, கலை, இலக்கியம், அறிவியல் தொழில்நுட்பம், தனித்திறன்கள் என அனைத்து துறைகளிலும் சிறந்து விளங்கி பள்ளிக்கு பெருமை சேர்த்து வருகின்றனர்.