GHSS OKM

மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர் விவரங்கள்

1.A.மேகலா என்ற மாணவி 2008ஆம் ஆண்டு கரூரில்நடைபெற்ற மாநில அளவிலான 100 மீட்டர் மற்றும் 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து தனிநபர் கோப்பையை பெற்ற இவர் கல்கத்தாவில் நடைபெற்ற தேசிய அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார். 2009ஆம் ஆண்டு நடைபெற்ற 54 ஆவது தேசிய அளவிலான 200 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்று நான்காம் இடம் பெற்றார்.  இவர் தொடர்ந்து 4 ஆண்டுகள் மாநில அளவில் நடைபெற்ற போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார் .

2. M .இருளாண்டி 2011ஆம் ஆண்டு திருவண்ணாமலையில் SDAT நடத்திய மாநில அளவிலான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் மூன்றாமிடம் பிடித்தார் . 2012ஆம் ஆண்டு  லூதியானா , பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான  1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் பங்கேற்றார். 2016ஆம் ஆண்டுல் இருந்து ராணுவ வீரராக பணிபுரியும் இவர் தற்போது அசாமில் பணிபுரிகிறார்.

3.K.ஐயப்பன்-2012ஆம் ஆண்டு நாகர்கோவிலில் SDAT நடத்திய மாநில அளவிலான 4*100 மீட்டர் தொடர் ஓட்டப் போட்டியில் இரண்டாமிடம் பிடித்தார். தற்போது 45 டிகிரியில் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்றுனராக     பணியாற்றுகிறார்.

4.M.அருண்பிரபு – 2011ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான 1500 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து ஏற்காட்டில் நடைபெற்ற மாநில அளவிலான தடகளப் போட்டியில் பங்கேற்றார். 2012ஆம் ஆண்டு லூதியானா , பஞ்சாப்பில் நடைபெற்ற தேசிய அளவிலான cross-country போட்டியில் பங்கேற்றார். தற்போது STCயில்(பொள்ளாச்சி) விளையாட்டு இட ஒதுக்கீட்டில் 100% சலுகையில் M.com படித்து  வருகிறார்.

5.S.ஸ்ரீஜித் – 2014ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து ராஞ்சியில் நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். 2015ஆம் ஆண்டு கும்பகோணத்தில் நடைபெற்ற  மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பெற்று காக்கிநாடா ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற தெற்கு மாநிலங்களுக்கிடையேயான போட்டியிலும் முதலிடம் பிடித்தார். பல்வேறு மாநில மற்றும் தேசிய போட்டியில் பங்கேற்கும் இவர் P .S .G  கல்லூரியில்  100% சலுகையில்  B .A படித்து  வருகிறார்.

6.M. ரவிக்குமார் 2015ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மாநில அளவிலான 2000 மீட்டர் ஓட்டப் போட்டியில் முதலிடம் பிடித்து காக்கிநாடா, ஆந்திர பிரதேசத்தில் நடைபெற்ற தெற்கு மாநிலங்களுக்கு இடையேயான போட்டியில் பங்கேற்று மூன்றாம் இடம் பிடித்தார். 2016 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான 5000மீட்டர் ஓட்டத்தில் முதலிடமும் , 1500 மீட்டர் ஓட்டத்தில் இரண்டாமிடம் பெற்றார். பின்னர் பூனேவில்  நடைபெற்ற தேசிய அளவிலான போட்டியில் பங்கேற்றார். பல்வேறு மாநில மற்றும் தேசிய போட்டியில் பங்கேற்கும் இவர்  பொள்ளாச்சி STC ( சரஸ்வதி தியாகராஜா கல்லூரியில்) 100% சலுகையில் B.Com   இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார்.

7.S.ஸ்ரீநாத் 2015ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் 52.35 மீட்டர் எறிந்து மாநில அளவில் புதிய சாதனை படைத்தார். இன்றளவும் இந்த சாதனை முறியடிக்கப்படவில்லை. தற்போது P .S .G  கல்லூரியில் 100% சலுகையில் B.Com     முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

8.S.பவித்ரா- 2016ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மாவட்ட அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் முதலிடம் பிடித்து கடலூரில் நடைபெற்ற மாநில அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் பங்கேற்றார். தற்போது ராமகிருஷ்ணா கல்லூரியில் B.E கணினி அறிவியல் பயின்று வருகிறார்.

9. S.அரவிந்தராஜ் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 2017 ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற மண்டல அளவிலான 1500 மீட்டர் ஓட்டத்தில் முதலிடம் பிடித்து திருச்சியில் நடைபெற்ற மாநில அளவிலான 1500 மீட்டர் ஓட்டத்தில் நான்காம் இடம் பிடித்துள்ளார். இவர் பல்வேறு இடங்களில் நடைபெற்ற மாரத்தான் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார்.

10.A. ஆதித்யன் 11ஆம் வகுப்பு படிக்கும் மாணவன் 2018 ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற 33வது தமிழ்நாடு மாவட்டங்களுக்கு இடையேயான ஜூனியர் தடகளப் போட்டியில் போட்டியில் (ரேஸ்வாக்)  இரண்டாமிடம் பெற்றுள்ளார். 2018 ஆம் ஆண்டு தேனியில் நடைபெற்ற 32வது தமிழ்நாடு மாநில ஓப்பன் தடகள போட்டியில் (ரேஸ்வாக்) போட்டியில் இரண்டாம் இடம் பிடித்துள்ளார்.

11.S.ரஞ்சித் பனிரெண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் ஊட்டியில் நடைபெற்ற மண்டல அளவிலான ஈட்டி எறிதல் போட்டியில் இரண்டாம் இடம் பிடித்து கல்லூரியில் நடைபெற்ற மாநில அளவிலான தடகள போட்டியில் பங்கேற்றார்.

.