அரசு மேல்நிலைப்பள்ளி ஒத்தக்கால்மண்டபம் இப்பள்ளியில் 884 மாணவர்களும், 32 ஆசிரியர்களும், 2 அலுவலக பணியாளர்கள் மற்றும் 2 சத்துணவு ஊழியர்களும் உள்ளனர்.
கோயம்புத்தூர் வட்டத்திலேயே 7 மெய்நிகர் வகுப்பறைகள் (Smart Class )கொண்ட ஒரே அரசுப் பள்ளி, 2019-ஆம் ஆண்டு ஜனவரி முதல் பயோமெட்ரிக் (Biometric) முறையில் ஆசிரியர்களுக்கு வருகை பதிவேடு தொடங்கப்பட்டுள்ளது.
கோவை மாவட்டத்திலேயே 3 பள்ளிகளில் மட்டுமே “ATAL TINKERING LAB “உள்ளது. அதில் நம் பள்ளியும் ஒன்று ,மத்திய அரசின் நிதி உதவியால் சுமார் 20 லட்சம் செலவில் அமைக்கப்பட்டுள்ளது.
மருத்துவம் மற்றும் பொறியியல் மாணவர்களை நுழைவுத்தேர்வுக்கு தயார்படுத்தும் வகையில் நீட் கோச்சிங் சென்டர்(NEET COACHING CENTER ) நீட் மற்றும் JEE தேர்வு மையமாகவும் இப்பள்ளி செயல்படுகிறது.
மாணவர்களுக்கு சமூக விழிப்புணர்வு ஏற்படுத்த இப்பள்ளியில் தேசிய பசுமைப்படை,நுகர்வோர் மன்றம் ,நாட்டு நலப்பணி திட்டம்,சாரண சாரணியர் இயக்கம்,JRC போன்ற நாட்டு நலப்பணித் திட்டங்கள் உள்ளன.
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் சுமார் 25 பேர் கடந்த செப்டம்பர் மாதம் மாம்பள்ளி கிராமத்தில் ஒரு வாரகாலம் சிறப்பு முகாம் அமைத்து ,பள்ளி வளாகம், கோவில் போன்ற இடங்களில் தூய்மை பணி மற்றும் பிளாஸ்டிக் ஒழிப்பு ,மழைநீர் சேகரிப்பு, போன்ற விழிப்புணர்வு பிரச்சாரங்களை மக்களிடையே ஏற்படுத்ததினர் .
NSS Othakkalmandapam
நாட்டு நலப்பணித்திட்ட மாணவர்கள் இடையே விளையாட்டுப் போட்டி இப்பள்ளியில் கடந்த நவம்பர் மாதம் பத்தாம் தேதி நடைபெற்றது. சுமார் 600 மாணவர்கள் மற்ற பள்ளியிலிருந்து இப்போட்டியில் கலந்துகொண்டனர் . எறிபந்து மற்றும் கோ கோ போட்டியில் ஒத்தக்கால் மண்டபம் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் முதலிடம் பெற்றனர்.